டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர்.
விடிய விடிய சோதனை தொடர்ந்ததாகவும், இன்றும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சோதனையை சுட்டிக்காட்டி, அலுவலகத்துக்கு வராமல் வீடுகளில் இருந்து பணிபுரியும்படி மின்னஞ்சல் மூலம் ஊழியர்களுக்கு பிபிசி நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.