உக்ரைன் ராணுவத்தினருக்கு, லெப்பர்டு ரக பீரங்கிகளை இயக்கும் பயிற்சி போலந்தில் அளிக்கப்பட்டது.
உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியின் கோரிக்கையை ஏற்று, 14 லெப்பர்டு-டூ பீரங்கிகளை வழங்க போலந்து சம்மதித்தது. கரடு முரடான பகுதிகளில் மணிக்கு 43 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த கவச பீரங்கிகளை இயக்க உக்ரைன் ராணுவத்தினருக்கு, போலந்து, நார்வே, கனடா நாட்டு பயிற்றுனர்கள் பயிற்சி அளித்தனர்.
அதனை பார்வையிட்ட போலந்து அதிபர் அண்ட்ரே டுடா, உக்ரைன் வீரர்கள் வேகமாக கற்றுகொள்வதாக பாராட்டினார்.