நியூஸிலாத்தில் காப்ரியேல் புயல் காரணமாக அந்நாட்டு வரலாற்றில் 3வது முறையாக தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வரும் நிலையில், நாடு முழுவதும் நூற்றுக்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
புயலால் ஏற்பட்ட சேதத்தின் அளவு வெளியானதைத் தொடர்ந்து அங்கு நாடு முழுவதும் தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டது. நியூஸிலாந்தின் வடக்குப் பகுதியில் நிலைமை மோசமாக இருப்பதாகவும் வெள்ளம் காரணமாக பல்வேறு இடங்களில் சாலை வசதி துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.