கேரள மாநிலம் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் கட்டடத்தில் திடீரென கொழுந்து விட்டு எரிந்த தீயால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் கரும்புகை மூட்டம் ஏற்பட்டது.
டயாலிசிஸ் மற்றும் அறுவை சிகிச்சை வார்டு அருகே 7 தளங்கள் கொண்ட வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இதில், முதல் மாடியின் ஒரு பகுதியில் திடீரென எரிந்த தீயை மருத்துவமனை ஊழியர்கள் கட்டுப்படுத்த முயற்சித்த போதும் கட்டுக்கடங்காமல் தீ மற்ற மாடிகளுக்கும் பரவியது.
இதனால், அருகிலுள்ள கட்டடங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் உடனடியாக வேறு கட்டடங்களுக்கு மாற்றப்பட்டனர்.