வட ஆப்ரிக்காவில் இருந்து ஐரோப்பா நோக்கி ஆபத்தான கடற்பயணம் மேற்கொண்ட அகதிகள் 6 பேர் உயிரிழந்தனர்.
உள்நாட்டுப் போர் காரணமாக சிரியா, ஈராக், ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைய ஆபத்தான கடற்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தெற்கு சஹாராவின் ட்க்லா நகரிலிருந்து அகதிகளை ஏற்றிக்கொண்டு ஸ்பெயின் நாட்டை நோக்கி புறப்பட்ட படகு, கேனரி தீவு அருகே சென்று கொண்டிருந்த போது, படகில் இருந்த 4 ஆண்களும், 2 பெண்களும் உயிரிழந்தனர். இதையடுத்து, அவர்களது உடல்கள் கடலில் வீசப்பட்டதாக உயிர்தப்பிய மற்ற 23 பேர் தெரிவித்தனர்.