உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் 3 நாட்கள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார்.
தொடக்க நிகழ்ச்சியில் ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.
34 அமர்வுகளாக நடைபெறும் மாநாட்டில், 41 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். தூதர்கள், முன்னணி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகள் உள்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
15-ற்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.