கோதுமை ஏலத்தின் அடிப்படை விலையை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
100 கிலோ கோதுமையின் அடிப்படை ஏல விலை 2 ஆயிரத்து 350 ரூபாயில் இருந்து 2 ஆயிரத்து 200 ரூபாய் என குறைக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோதுமைக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க அரசுக் கிடங்குகளில் உள்ள 30 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மூட்டைகளை பிப்ரவரி ஒன்றாம் தேதியில் இருந்து பொது ஏலம் மூலம் மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய அண்மையில் மத்திய அரசு உத்தரவிட்டது. வாரம்தோறும் புதன்கிழமை இதற்கான ஏலம் நடைபெறுகிறது.