துருக்கியில் நிலநடுக்கத்தால் இடிந்துபோன ஆறாயிரத்து 400 கட்டடங்களும் ஓராண்டிற்குள் மீண்டும் கட்டி எழுப்பப்படும் என அதிபர் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
கடும் குளிரில் மக்கள் நடுங்கிவருவதாகவும், மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க கேஸியன்டாப் நகரில் நிலநடுக்க பாதிப்புகளை அதிபர் எர்டோகன் ஆய்வு செய்தார்.
நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், 63 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்...