உக்ரைனுக்கு பிரிட்டன் அல்லது மேற்கத்திய நாடுகள் போர் விமானங்களை அனுப்பினால் உக்ரைன் மக்களே பாதிக்கப்படுவர் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
நேற்று பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் சென்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய நாடுகள் போர் விமானங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அதுகுறித்து பேசிய ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் என்ன ஆயுதங்களை வழங்கினாலும் ரஷ்யா ராணுவ தாக்குதலை முன்னெடுக்கும் என்றும், போர் விமானங்களை தருவது உக்ரைன் மக்களுக்கு வலியையும் துன்பத்தையும் மட்டுமே தரும் என்றும் தெரிவித்தார்.