பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் மற்றும் ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஷால்ஸை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பாரீஸில் இம்மானுவேல் மேக்ரன், மற்றும் ஓலாஃப் ஷால்ஸுடன் நேற்று, இரவு விருந்தில் பங்கேற்ற ஜெலென்ஸ்கி, ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு போர் விமானங்கள் வழங்க ஐரோப்பிய நட்பு நாடுகளிடம் வலியுறுத்தினார்.
இன்று பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் செல்லும் அவர், அங்கு நடைபெறும் ஐரோப்பிய தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார்.
முன்னதாக நேற்று லண்டனில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் மன்னர் 3-ம் சார்லஸையும் ஜெலென்ஸ்கி சந்தித்தார்.