வெளிநாடுகளில் டெத் டைவிங் முறையில் நீரில் குதிப்பது சிறுவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
1970களில் நார்வே நாட்டில் தொடங்கிய இந்த விபரீதமான விளையாட்டில் பல அடி உயரத்தில் இருந்து நீரில் குப்புறவோ அல்லது முதுகில் அடிபடுவது போல குதிப்பது டெத் டைவிங் என அழைக்கப்படுகிறது.
பெரியவர்கள் மட்டுமின்றி தற்போது சிறுவர்கள் கூட இந்த விளையாட்டில் ஈடுபடுவது பார்ப்பவர்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இதனால் சிறுவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாக டிக்டாக் நிறுவனம் எச்சரித்துள்ளது.