ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவு அளிப்பதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள அண்ணாமலை, அதிமுக வேட்பாளரை முன்னிறுத்தி இருக்கும் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், கூட்டணியின் நன்மை கருதி தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்றிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த இடைத்தேர்தல் வெற்றி, வருங்கால தேர்தல் வெற்றிகளுக்கு வரவேற்பு கூறும் வண்ணம் அமைய, கண்ணுறக்கம் இன்றி, பாஜகவினர் கடுமையாக உழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ள அண்ணாமலை, அதிகார பலம், பண பலத்துடன் எதிரி வந்தாலும், மக்கள் பலத்துடன் மனதார உழைக்க வேண்டுமெனவும் அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.