துருக்கி மற்றும் சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படுமென டச்சு ஆராய்ச்சியாளர் ஒருவர் மூன்று நாட்களுக்கு முன்னரே ட்வீட் செய்தது இணையத்தில் வைரலாகி வருகிறது
இரு நாடுகளிலும் நிலநடுக்கத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இ
ந்நிலையில், டச்சு ஆராய்ச்சியாளரான ஃப்ராங்க் கூகர்பீட்ஸ் பிப்ரவரி 3ம் தேதி அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய மற்றும் தென் துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் ஆகிய பகுதிகளைக் குறிப்பிட்டு 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கணித்து வரைபடத்துடன் கூறியிருந்தார்.