மறைந்த நடிகர் டி.பி.கஜேந்திரனின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், நடிகர்கள் செந்தில், கவுண்டமணி, ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் செந்தில், கஜேந்திரன் நல்ல மனிதர்... அவரை பற்றி இதுவரை எந்த கிசு கிசுவும் வந்ததில்லை என்றார்.
நடிகர் கவுண்டமணி அஞ்சலி செலுத்த வந்த போது, இரண்டாவது தளத்திற்கு செல்ல லிப்ட்டிற்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது, அருகில் இருந்தவர்களிடம் "லிப்ட் எங்கையா..? 'நடந்தே வரும் போல..' என்று தனக்கே உரிய பாணியில் கூறினார்.