ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த ஓராண்டு காலமாக போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் சிறையிலிருந்து 63 போர்க் கைதிகள் திரும்பி வந்திருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக ரஷ்ய ஆயுதப்படையை சேர்ந்த அவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் உக்ரைன் போர்க் கைதிகள் 116 பேர் ரஷ்யாவால் விடுவிக்கப்பட்டிருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.