விரைவில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ள கர்நாடக மாநிலத்தின் பாஜக சட்டமன்ற தேர்தல் மேலிட இணை பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக, சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் பேட்டியளித்த அண்ணாமலை, ஐபிஎஸ் அதிகாரியாக கர்நாடக மாநிலத்தில் பணியாற்றிய அனுபவம் தற்போது தேர்தலில் கைகொடுக்கும்.
தனக்கு மீண்டும் வேலைப்பளு அதிகரித்தாலும், என்மீது கட்சி வைத்துள்ள நம்பிக்கை பெருமை அளிப்பதாக உள்ளது. 2023ம் ஆண்டுத் தேர்தலில் கர்நாடகாவில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என்றும் அண்ணாமலை கூறினார்.