உக்ரைனுக்கு ஜெர்மனி Leopard 1 போர் டாங்கிகள் வழங்குவதற்கு எதிராக ரஷ்யா டாங்கிகள் பயிற்சியில் ஈடுபட்டது.
லெனின்கிராட் பிராந்தியத்தில் உள்ள பயிற்சி மைதானத்தில் ரஷ்ய வீரர்கள் T-90 டாங்கிகளின் மேம்படுத்தப்பட்ட மாடலான T-90M டாங்கிகளுடன் பயிற்சி மேற்கொண்டனர்.
பகல் இரவாக நடைபெற்ற பயிற்சியில், டாங்கிகள் எதிரியின் கவச வாகனங்கள், விமானம் உள்ளிட்ட இலக்குகளை 5 ஆயிரம் மீட்டர் தூரம் வரை தாக்கும் வகையில் பயிற்சி மேற்கொள்ளப்பட்டன.
Leopard போர் டாங்கிகளை இயக்கும் பயிற்சியை உக்ரைன் வீரர்களுக்கு போலந்து நேற்று முதல் அளித்து வருகிறது. Leopard 1 போர் டாங்கிகள் 2-ம் உலகப்போருக்கு பிறகு ஜெர்மனி உருவாக்கிய முதல் டாங்கிகளாகும்.
ஜெர்மனி தற்போது Leopard 2 டாங்கிகளை மட்டுமே பயன்படுத்தி வருகிறது.