ரஷ்யாவை போரில் எதிர்கொள்ள உக்ரைனுக்கு சக்திவாய்ந்த லெப்பர்ட்-2 ரகத்தைச் சேர்ந்த 14 பீரங்கிகளுடன், கூடுதலாக பழைய லெப்பர்ட்-1 ரக பீரங்கிகளையும் வழங்க ஜெர்மனி ஒப்புதல் அளித்துள்ளது.
தொழிற்சாலை கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள லெப்பர்ட்-1 ரக பீரங்களை பழுது பார்த்து சரிசெய்த பிறகு, விரைவில் உக்ரைனுக்கு வழங்கப்படும் என்று அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் Steffen Hebestreit தெரிவித்துள்ளார்.
எனினும், அந்த ரக பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் 105 மி.மீ குண்டுகளைப் பெறுவதில் சிக்கல் உள்ளது.