பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள ஐ.எம்.எப். கடனை எதிர்நோக்கியுள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியம் விதிக்கும் நிபந்தனைகள் கடுமையாக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் தனது நாட்டிற்கு ஒரு பில்லியன் டாலர் கடனைத் தருவதற்கு கடினமான கெடுபிடிகளை விதிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார்.
ஒரு பில்லியன் டாலர் கடனை விடுவிப்பதற்கான தடைப்பட்ட பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க IMF பிரதிநிதிகள் குழு பாகிஸ்தானில் முகாமிட்டு உள்ளது.
இக்குழு மின் கட்டணத்தை யூனிட்டுக்கு 12 ரூபாய்க்கு மேல் உயர்த்துவது போன்ற பல்வேறு நிபந்தனைகளை பாகிஸ்தான் அரசுக்கு விதித்து வருகிறது.