சென்னை, அம்பத்தூரில், இந்தியன் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்த வாடிக்கையாளருக்கு கூடுதலாக பணம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த ஏடிஎம்மில் 8 ஆயிரம் ரூபாய் எடுக்க வந்த வாடிக்கையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் வந்தது.
10க்கும் மேற்பட்ட இதர வங்கிச் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் கூடுதலாக பணம் வந்த நிலையில், அதில் 6 பேர் வங்கியில் வந்து பணத்தை திருப்பிக் கொடுத்துள்ளனர்.
ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் ஊழியர்கள் , 200 ரூபாய் நோட்டு வைக்க வேண்டிய ட்ரேயில் 500 ரூபாய் நோட்டுக்களை தவறுதலாக வைத்ததால் இதுபோன்று நடந்ததாகவும், இந்த பிரச்சனை உடனடியாக சரி செய்யப்பட்டதாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்