காஷ்மீரின் நான்கு மாவட்டங்களில் பனிச்சரிவு ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள ஒரு பனிச்சறுக்கு விளையாட்டு மையத்தில் போலந்து நாட்டைச் சேர்ந்த இரண்டு வெளிநாட்டவர்கள் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் 19 பேர் பனிமலையில் இருந்து மீட்கப்பட்டனர். இதுபோன்ற மேலும் பல இடங்களில் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடுமையாகப் பனிப்பொழிந்து வரும் நிலையில் பனிச்சறுக்கு போன்ற விளையாட்டுகளைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.