அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கடற்கரை இல்லத்தில், எஃப்பிஐ அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர்.
துணை அதிபராக பதவி வகித்த காலகட்டத்தைச் சேர்ந்த ரகசிய ஆவணங்களை பதுக்கி வைத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. டெலவரில் ஜோ பைடனுக்கு இடங்களில் நடைபெற்ற சோதனையின் போது ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்நிலையில், டெலவேர் மாகாணத்திலுள்ள ஜோ பைடனின் தனியார் அலுவலகம் மற்றும் கடற்கரை இல்லத்தில் எப்.பி.ஐ.அதிகாரிகள் 4 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது ரகசிய ஆவணங்கள் ஏதும் கைப்பற்றவில்லை என ஜோ பைடனின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.