தென்மேற்கு இங்கிலாந்தில் ஏராளமான ஸ்டார்லிங் பறவைகள் ஒன்றிணைந்து வானில் சாகச நடனத்தை அரங்கேற்றின.
டெவ்க்ஸ்பரி நகருக்கு மேலே ஆயிரக்கணக்கான பறவைகள் ஒன்றிணைந்து விதவிதமான வடிவில் பறந்தன.
குறிப்பிட்ட பகுதியில் தமக்கு அச்சுறுத்தல் உள்ளது எனத் தெரிந்ததும், ஸ்டார்லிங் பறவைகள் தங்களை தற்காத்துக் கொள்ள ஒரே நேரத்தில் வானில் எழுகின்றன என பறவை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.