அமெரிக்காவில் சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வர, அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு அந்நாட்டில் கொரோனா பரவல் தொடங்கியபோது அப்போதைய அதிபர் டிரம்ப், தேசிய அவசர நிலை மற்றும் பொது சுகாதார அவசர நிலையை அறிவித்தார். பின்னர், 2021ம் ஆண்டு அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதில் இருந்து, அவசர நிலை நீட்டிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்திருப்பதால், மே 11ம் தேதியோடு அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவர இருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.