இந்தியாவின் மதச்சார்பற்ற நெறிமுறைகளை காப்பதே, இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் நோக்கம் என, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம், ஜம்மு காஷ்மீரில் இன்றுடன் நிறைவடைந்தது.
ஸ்ரீநகரில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் பேசிய ராகுல்காந்தி, தனக்காகவோ அல்லது காங்கிரஸ் கட்சியை முன்னிறுத்தியோ அல்லாமல், நாட்டு மக்களுக்காகவே இந்த நடைபயணத்தை தாம் மேற்கொண்டதாக குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கூட்டணிக்கட்சிகளின் முன்னணி நிர்வாகிகள், நடைபயண இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.