பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் மசூதியில் தொழுகையின்போது நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில், 28 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 150 பேர் படுகாயமடைந்தனர். காவலர் குடியிருப்பு அருகில் இருக்கும் அந்த மசூதியில், இன்று மதியம் தொழுகைக்காக சுமார் 260 பேர் கூடியிருந்த போது குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
குண்டுவெடிப்பில் மசூதியின் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி 28 பேர் பலியான நிலையில், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.