சொத்து தகராறு காரணமாக தன்னை ஒருவாரம் கோவாவில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக 75 வயதான பிரெஞ்சு மூத்த நடிகை மாரியான் போர்கோ புகார் அளித்துள்ளார்.
கோவாவில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள சொத்துக்கு இருதரப்பினர் உரிமை கோரி வருகின்றனர். இதில் ஒருவர் பிரெஞ்சு நடிகை மாரியான் போர்கோ ஆவார்.
இன்னொருவர் நேபாளத்தைச் சேர்ந்த பெண் ஆவார். காவல்துறையினர் அந்த வீட்டை ஆய்வு செய்தனர். அடைத்து வைக்கப்பட்டதாக பிரெஞ்ச் நடிகை கூறும் புகாரை காவல்துறையினர் மறுத்துள்ளனர்.
பிரெஞ்ச் நடிகை தமது உதவியாளர் பணிப்பெண் உள்ளிட்டோருடன் அந்த வீட்டில் தங்கியிருப்பதாகவும் வீட்டின் வெளிப்பக்கம் பூட்டப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்