பல்கேரியாவில் பாரம்பரியமான முகமூடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. தீய சக்திகளை விரட்டும் விதமாகவும், மக்களுக்கு அதிர்ஷ்டத்தையும் ஆரோக்கியத்தையும் கொண்டு வரும் விதமாகவும் இந்த திருவிழா நடத்தப்படுகிறது.
விழாவையொட்டி பெர்னிக் நகரில், பாரம்பரிய உடைகள், விலங்குகளின் உரோமங்களால் ஆன உடைகளை அணிந்து முகமூடியுடன் வந்த நடனக் கலைஞர்கள் டிரம்ஸ் இசைத்தபடி ஊர்வலமாக சென்றனர்..
கொரோனா பரவல் காரணமாக இந்த திருவிழா 3 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டு நடைபெற்றுள்ளது. இதில் அல்பேனியா, இத்தாலி, ருமேனியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர்.