ஜெருசலேமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு தங்களின் பதில் வலுவாகவும், வேகமாகவும், துல்லியமாகவும் இருக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஜெருசலேமில் உள்ள யூதர்களின் ஆலயத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைநகரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்பட்டுள்ளதாகவும், தங்களை யார் காயப்படுத்த முயன்றாலும், அவர்களையும் அவர்களுக்கு உதவி செய்பவர்களையும் தாங்கள் காயப்படுத்துவோம் என்றும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.