ஜம்மு காஷ்மீரில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு இருந்ததாக ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், இன்றைய நடைபயணத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நடைபயணம் நேற்று ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அவந்திபோராவில் இன்று மீண்டும் தொடங்கியது. இதில் ராகுல்காந்தியுடன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தியும் கலந்துகொண்டார்.
இதுகுறித்து பேசிய காவல்துறை ஏடிஜிபி விஜய் குமார், நடைபயணத்திற்கு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டிருப்பதால் நடைபயணம் சுமூகமாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.