இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல்துறை அமைப்பைச் சேர்ந்த 60 பிரதிநிதிகள், டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
இந்தியாவை காக்க இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களின் நினைவிடத்திற்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததன் பேரில், 44 நாடுகளைச் சேர்ந்த இன்டர்போல் பிரதிநிதிகள் 60 பேர் இந்தியா வந்தனர்.
இக்குழுவினர் நேற்று டெல்லியில் நடைபெற்ற பிரம்மாண்டமான குடியரசு தின கொண்டாட்டங்களை பார்வையிட்ட நிலையில், இன்று காவலர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
இண்டர்போல் அமைப்பு தொடங்கப்பட்டு இந்த ஆண்டோடு 100 ஆண்டுகள் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.