ஜம்மு காஷ்மீரில் தனது நடைபயணத்திற்கான பாதுகாப்பு விஷயத்தில், காவல்துறையினர் தோல்வியடைந்துவிட்டதாக, ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் அனந்த் நாக்கில், ராகுல்காந்தி இன்று இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டார். 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபயணம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பயணம் தொடங்கிய 500 மீட்டரிலேயே ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து பேசிய ராகுல்காந்தி, ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் செயல்பாடு தோல்வியடைந்ததாகவும், கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய காவலர்களை எங்கும் காண முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
தான் மேற்கொண்டு யாத்திரை செல்வதை தனது பாதுகாப்பு அதிகாரிகள் விரும்பாததால், நடைபயணத்தை ரத்து செய்ததாகவும் ராகுல்காந்தி தெரிவித்தார்.