பாலஸ்தீனத்திற்குள் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், பாலஸ்தீனர்கள் 10 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.
ஜெனின் நகருக்குள், தீவிரவாத தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் நுழைந்த இஸ்ரேல் ராணுவத்தினர் மீது பாலஸ்தீன ஆதரவாளர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இஸ்ரேல் ராணுவத்தினரும் பதிலடி கொடுத்ததால், இருதரப்பினருக்கும் இடையே 4 மணி நேரத்திற்கும் மேலாக சண்டை நீடித்த நிலையில், 9 பாலஸ்தீனியர்கள் பலியாகினர்.
இந்த தாக்குதலைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது இஸ்ரேல் ராணுவத்தினர் சுட்டதில் மேலும் ஒருவர் கொல்லப்பட்டதாக, பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இஸ்ரேல் உடனான பாதுகாப்பு உறவை துண்டிப்பதாக பாலஸ்தீனம் அறிவித்துள்ளது.