ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியில் இரண்டு வங்கி ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து, 38 லட்சம் ரூபாயை, முகமூடி கொள்ளையர்கள் திருடிச்சென்ற காட்சி, அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து 8 லட்சம் ரூபாயும், மற்றொரு ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து 30 லட்சம் ரூபாயும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இரண்டு ஏடிஎம் மையத்திலும் ஒரே மாதிரி கொள்ளை நடந்திருப்பதால், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.