அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையைத் தொடர்ந்து ஆசிய கோடீசுவரரான கவுதம் அதானி ஒரேநாளில் 6 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்து இருப்பதுடன், உலக பணக்காரர் பட்டியலில் 2-ம் இடத்தில் இருந்து 4-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
அதானி நிறுவனம் குறித்து அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையில் முறைகேடாக சந்தையைக் கையாளுதல் மற்றும் கணக்கியல் மோசடியில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, 'அறிக்கையில் வெளியான தகவல்கள் உண்மையல்ல என்றும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்' எனவும் அதானி குழுமத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரத்தின்படி உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் பெர்னார்ட் அர்னால்ட்டும், 2-வது இடத்தில் எலான்மஸ்க்கும் இருந்து வருகின்றனர்.
3-ம் இடத்தில் ஜெப் பெசோசும், 4-வது இடத்தில் கவுதம் அதானியும் உள்ளனர். அதானியின் தற்போதைய சொத்து மதிப்பு 113 பில்லியன் டாலர்களாக உள்ளது.