ஜெர்மனியில் விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் 300 க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதும், தரையிறங்குவதும் தடைபட்டது.
நடப்பாண்டில் அங்கு 6 சதவீதம் வரை விலைவாசி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தலைநகர் பெர்லினிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், 44 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கக்கோரி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அதிகாலை மூன்றரை மணிக்கு தொடங்கிய வேலை நிறுத்தத்தால் 35 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.