மணிப்பூரின் சந்தல் மாவட்டத்தில் ஃபாஸிக் கிராமத்தில் சுமார் 85 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை மணிப்பூர் மற்றும் அஸ்ஸாம் ஆயுதப்படைகள் இணைந்து அழித்தனர்.
சாஜிக் தம்பக் பட்டாலியன்கள் என்ற இந்த கூட்டுப்படையினர் மலைப்பகுதியில் 3 நாட்களாக கஞ்சா செடி அழிப்பு பணியில் ஈடுபட்டனர். இமயமலைப்பகுதிகளில் வளர்க்கப்படும் கஞ்சாவிற்கு அதிக மருத்துவ குணம் உண்டு என்று கூறப்படுவதால் வெளிநாட்டுச் சந்தைகளிலும் அதிக கிராக்கி உள்ளது.
எனினும், இந்தியாவில் போதைப் பொருள் பட்டியலில் கஞ்சா இருப்பதால் இமயமலை அடிவாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக அதிகளவில் கஞ்சா பயிரிடப்பட்டு வருகிறது.