இந்தியாவின் இறையாண்மைக்குள் சீனா மூக்கை நுழைத்தால் பதிலடி கொடுக்கும் வலிமை நமது படைகளுக்கு உள்ளது என்று முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி ஜே.ஜே.சிங் கூறியுள்ளார்.
சீனாவுடன் உறவுகளை மேம்படுத்த தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசிய ஜே.ஜே.சிங், சீனா சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருப்பதால் அது தரும் வாக்குறுதிகளை நம்பிவிடக்கூடாது என்றும் எச்சரித்தார்