சுவர்களில் சிறுநீர் கழித்தால் , கழிப்பவர் மீதே மீண்டும் திருப்பி அடிக்கும் வகையிலான நவீன பெயிண்ட் ஒன்று லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொது இடங்களில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் லண்டனில் பரபரப்பாக காணப்படும் சோஹோ பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அங்கு வசிக்கும் முவ்வாயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து , நீரைத் தெளித்தால் அதனை வந்த திசையிலேயே மீண்டும் திருப்பி அடிக்கும் வகையிலான பெயிண்ட் ஒன்றை முதற்கட்டமாக சோஹோவில் உள்ள முக்கியமான 10 இடங்களில் உள்ள சுவர்களில் அப்பகுதி நகரசபை சார்பில் பூசப்பட்டு உள்ளது.