சீனர்களின் முக்கியத் திருவிழாவான லூனர் புத்தாண்டை முன்னிட்டு மலேசியாவில் கலை நிகழ்ச்சிகளுக்காக சிங்கத்தலை உருவாக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சீன வம்சாவளியைச் சேர்ந்தவரான சியோவ், மலேசியா முழுவதிலும் உள்ள சிங்க நடனக் குழுக்களுக்கான கலைப்பொருட்களை கையாலேயே வடிவமைத்து வருகிறார்.
கடந்த 40 ஆண்டுகளாக அவர் இப்பணியில் ஈடுபட்டு வருகிறார். சிங்கத் தலை தயாரிக்கும் கைவினைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், மலேசியாவில் தற்போது 10 பேர் மட்டுமே உள்ளதாகவும் கூறப்படுகிறது.