உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் என அழைக்கப்பட்ட உசைன் போல்டிடம் பங்குச்சந்தை முதலீட்டு நிறுவனமொன்று 97 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கப்பதக்கங்கள் வென்றுள்ள உசைன் போல்ட், தான் ஈட்டிய வருமானத்தின் பெரும்பகுதியை ஜமைக்காவிலுள்ள முதலீட்டு நிறுவத்தில் 10 ஆண்டுகளாக முதலீடு செய்துவந்துள்ளார். அவரது முதலீட்டு கணக்கிலிருந்த 97 கோடி ரூபாய் திடீரென மாயமாகி தற்போது வெறும் 97 ஆயிரம் ரூபாய் மட்டுமே எஞ்சியுள்ளது.
முதலீட்டு நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரே பணத்தை கையாடல் செய்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உசைன் போல்டின் வாழ்நாள் சேமிப்பு முழுவதும் மாயமானதால் அதனை மீட்க போலீசார் தீவிரமாக முயற்சித்துவருகின்றனர்.