சென்னை கொத்தவால்சாவடியில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில், முதியவரை எட்டி உதைத்தது தொடர்பாக எஸ்ஐ ராதாகிருஷ்ணனை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து, காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி உத்தரவிட்டார்.
விழாவில், கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கு போதுமான முன்னேற்பாடுகள் செய்யப்படாத நிலையில், உணவு வாங்குவதற்காக பொதுமக்கள் முண்டியடித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த, எஸ்ஐ ராதாகிருஷ்ணன், நெருக்கியடித்தவர்களை முதியவர்கள் என்றும் பாராமல் தரதரவென இழுத்து கீழே தள்ளி விட்டதுடன், ஒருவரை எட்டி உதைத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.