சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்லூரியில், மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான, இலவச பயிற்சி மையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 சதவீதம் பேர் மட்டுமே மத்திய அரசின் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.