ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களை சமாளிக்க பீரங்கிகளை வழங்கும்படி உக்ரைன் அரசு நட்பு நாடுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
பீரங்கிகள் கிடைத்தால் போரின் போக்கையே அது மாற்றியமைக்கக் கூடும் என்றும் உக்ரைன் கோரியுள்ளது. இதனைப் பரிசீலிப்பதாக ஜெர்மன் அரசு தெரிவித்துள்ளது.
புதிதாகப் பொறுப்பேற்கும் பாதுகாப்பு அமைச்சரின் செயல்திட்டத்தில் இக்கோரிக்கை முதன்மைப்படுத்தப்படும் என்று ஜெர்மனி தெரிவித்துள்ளது. இதனிடையே ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களால் சிதிலமடைந்த நிப்ரோவில் இடிபாடுகளுக்கு இடையே உடல்களைத் தேடும் பணி முடிவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.