முன்னோடி திட்டமான அக்னிபாதை திட்டம், நாட்டின் ஆயுதப்படைகளை வலுப்படுத்துவதுடன், எதிர்கால சவால்களை எதிர்கொள்ள வீரர்களை தயார்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அக்னிபாதை திட்டத்தின் கீழ் முப்படைகளுக்கும் தேர்வான முதல் அக்னி வீரர்கள் குழு, பயிற்சியை தொடங்கவுள்ள நிலையில், வீரர்கள் மத்தியில் காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது, அக்னி வீரர்கள், ஆயுதப்படையை இளமையானதாகவும், தொழில்நுட்ப அறிவுசார்ந்ததாகவும் உருவாக்குவார்கள் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.