பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்பவர்கள் அதிக அளவில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.
சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பயணிகள் கூட்ட நெரிசலின்றி சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், பயணிகளின் வசதிக்காகவும் கோயம்பேடு மட்டும் இல்லாமல் தாம்பரம் ரயில் நிலையம், தாம்பரம் சானிட்டோரியம், பூந்தமல்லி, கே. கே நகர், மாதவரம் உள்ளிட்ட 6 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நகரின் மற்ற இடங்களில் இருந்து இந்த பேருந்து நிலையத்துக்கு செல்ல இணைப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொங்கலையொட்டி 16 ஆயிரத்து 932 பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.