உகாண்டாவில் எபோலா பரவல் முடிவுக்கு வந்ததாக, உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. உகண்டாவில் கடந்த ஆண்டு இறுதியில் பரவிய எபோலா வைரஸிற்கு 55 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 42 நாட்களாக புதிதாக எபோலா வைரஸ் பாதிப்பு பதிவாகாததால் முடிவுக்கு வந்ததாக, உகண்டாவின் சுகாதார அமைச்சர் ரூத் அசெங் அறிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின்படி, ஒரு நாடு எபோலா வைரஸ் இல்லாத நாடாக அறிவிக்கப்பட வேண்டுமானால், 42 நாட்கள் புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்படாமல் இருக்க வேண்டும்.