பாகிஸ்தானின் தேர்தல்ஆணையம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் பாகுபாடான கொள்கையை கொண்டிருப்பதாகவும், நடுநிலையாக இருக்கத் தவறி விட்டதாகவும் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் தலைவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இது தொடர்பான விசாரணையில் இருந்து விலக்கு கோரிய மனுக்களை நிராகரித்த தேர்தல் ஆணையம் இம்ரான்கான் உள்ளிட்டவர்களுக்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய கைது உத்தரவைப் பிறப்பித்தது.