வறண்ட பாலைவன நாடாக அறியப்படும் சவூதி அரேபியாவின் மெக்கா மலைப்பகுதிகள், தற்போது பசுமை வனமாக மாறியிருக்கும் அரிய காட்சி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மெக்கா மலைப்பகுதிகள் பொதுவாக வறண்டு பாலைவனமாக இருக்கும். ஆனால், கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கிய கனமழையால், பாலைவனமாக இருந்த பகுதிகளில், தற்போது புற்கள் வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கின்றன.
ஒட்டகங்கள், புற்கள் மீது நடந்துச்சென்ற காட்சிகளை, சவூதியின் வானிலை ஆர்வலர் அப்துல்லா அல்சுலாமி செல்போனில் படம்பிடித்து வெளியிட்டுள்ளார்.