ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டதின்போது, துணை ராணுவப் படை வீரர் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
போலீஸ் காவலில் இளம்பெண் மஹ்சா அமினி கடந்த செப்டம்பர் 16ம் தேதி உயிரிழந்ததை தொடர்ந்து நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்தன. போராட்டத்தின் போது துணை ராணுவ வீரர் ருஹோல்லா அஜாமியன் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான முகமது மஹ்தி கராமி மற்றும் செய்யத் முகமது ஹொசைனி ஆகியோர் தூக்கிலிடப்பட்டதாக நீதித்துறை செய்தி ஏஜென்சி உறுதி செய்துள்ளது. மேலும், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 11 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.